குருமூர்த்தி மீது ஜெயலலிதா மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார்: அமைச்சர் அதிரடி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவரது இந்த கருத்து அதிமுகவில் கோப அலையை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரை பலவீனமனவர்கள் என விமர்சிக்க, அவர்கள் ஆண்மையற்றவர்கள் என நேரடி பொருள்படக்கூடிய ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதனையடுத்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது.
இதனையடுத்து இருவரும் தங்கள் தரப்பு விளக்கங்களை கொடுத்து சற்று ஜகா வாங்கினர். ஆனால் இந்த விவாதம் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மற்றொரு அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுமை காக்கிறார், ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் மான நஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கும் என்றார் ஆவேசமாக.