1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:33 IST)

களம் இறங்குங்கள் உடன்பிறப்புகளே: டெங்குவை ஒழிக்க தீபா அழைப்பு!

களம் இறங்குங்கள் உடன்பிறப்புகளே: டெங்குவை ஒழிக்க தீபா அழைப்பு!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் தீவிரம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு பல்வேறு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.


 
 
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் களம் இறக்கியுள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா தனது தொண்டர்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இறங்க வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டெங்குவை ஒழிக்க நமது பேரவை மற்றும் தீபா அணி சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் தமிழகம் முழுவதும் அவரவர் பகுதிக்குட்பட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், சுகாதார பணிகள் போன்ற களப்பணிகளை மக்கள் நலனோடு மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.