திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (06:54 IST)

ஒரே நாளில் ஓபிஎஸ் அணிக்கு கட்சி மாறிய தீபா கட்சியினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என ஆயிரக்கணக்க்கான தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து அவரது வீட்டின் முன் குவிந்தனர்.



ஆனால் திடீரென சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அரசியல் செய்ய ஆரம்பித்ததும் தீபாவுக்கு மவுசு குறைந்து ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்நிலையில் பேரவையின் தலைவராக சரண்யாவும், மாநிலச் செயலாளராக ராஜாவும் நியமிக்கப்பட்டனர். பொருளாளர் பதவியை தன் வசமே தீபா வைத்துக் கொண்டார். மற்ற நிர்வாகிகள் பெயரை இன்று அறிவிக்கவுள்ளர்.

இந்நிலையில் நிர்வாகிகள் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவின் எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவையை சேர்ந்த 1000 பேர் திடீரென கட்சியை விட்டு விலகி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

கட்சி ஆரம்பித்த ஒரே நாளில் தொண்டர்கள் கட்சி மாறியதால் தீபா தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.