பிளஸ் 1 தேர்விலும் தமிழ் பாடத்தை எழுத வராத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!
சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு தொடங்கப்பட்ட நிலையில், அந்த தேர்வில் தமிழ் மொழி பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், நேற்று தொடங்கப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 11,090 பேர் தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் ஒன் பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் தமிழ் மொழித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 8,23,000 பேருக்கு அதிகமானோர் எழுத இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், நேற்று நடந்த தமிழ் மொழித் தேர்வில் 11,090 மாணவ-மாணவிகள் எழுதவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் பத்தாம் தேதி பிளஸ் ஒன் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் எத்தனை பேர் ஆப்சென்ட் ஆவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் உள்பட மொழித் தேர்வுகளை எழுத மாணவர்கள் முன்வராமல் இருப்பது கவலைக்கிடமான சூழலாக உள்ளது.