ஓசி சோறு உண்ணும் ஐயா: கி.வீரமணியை கலாய்த்த தயாநிதி அழகிரி
கடந்த பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாறி மாறி தனது ஆதரவை தெரிவித்து வந்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, கடந்த சில ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரி கூறிய ஆதங்க கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீ.வீரமணி, 'வீட்டில் இருப்பவர்கள் குறித்து கேளுங்கள். வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்' என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் “காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்” என்று கலாய்த்துள்ளார்.
தயாநிதியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் அழகிரி ஆதரவாளர்கள் வீரமணியை கடுமையாக தாக்கி கருத்து கூறி வருகின்றனர்.