திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (13:31 IST)

வேலைக்காரியுடன் ஜல்ஷா : தந்தையை கொல்ல கூலிப்படையை நாடிய மகள்

வேலைக்காரியுடன் நெருக்கமாக இருந்த தந்தையை மகளே கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சி செய்த விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தேவசகாயம்(62). மனைவின் மறைவிற்கு பின் அவர் தனது மகள் லதா மற்றும் மருமகன் பாபு ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.  அப்போது, அவரின் வீட்டில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்த சித்ரா(45) என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
சித்ரா வீட்டிலேயே தங்கி இருப்பது தேவசகாயத்திற்கு வசதியாய் போனது. எனவே, அவருடன் அடிக்கடி அவர் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், வேலைக்காரின் பேச்சை கேட்டே அனைத்தையும் செய்துள்ளார்.
 
இதை கண்டுபிடித்த தேவசகாயத்தின் மகள் லதா, வேலைக்காரியின் பேச்சைக்கேட்டு எங்கே தங்களை இந்த வீட்டை விட்டு தந்தை விரட்டி விடுவாரே என பயந்து தனது கணவருடன் ஆலோசனை செய்து அவரை கொல்வது என முடிவெடுத்துள்ளார். 
 
அதற்காக ஒரு கூலிப்படையை தொடர்பு கொண்டு பேசி பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6ம் தேதி 8 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து தேவசகாயத்தை வெட்டி சாய்த்தது. அவரின் அலறல் சத்தம் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தேவசகாயம் உயிருக்கு போராடி வருகிறார்.
 
இந்நிலையில், தேவசகாயத்தின் மகளும், மருமகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.