புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:42 IST)

’’ஊரடங்கு’’ குறித்து பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்!!

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருள்ளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,172 பேர்களாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 12 லட்சத்து 82 ஆயிரத்து  41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,69,451 பேர் குணமடைந்துள்ளானர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 3,36,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 9620 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது.  இருப்பினும்  பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்துவருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர், பாரத பிரதமர், மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி அனைவரும் வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு , மெழுகுவர்த்தி ஏற்றும்படி கோரியிருந்தார்.
இதையேற்று நேற்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றினர். இதுபாரத மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவை எரித்து போராட வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எந்தவொரு  முறையான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும்,  அடுத்த வேளை சமைப்பதற்கு தேவையான எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  இந்தக் கடிதத்தை பதிவிட்டு, அதை பிரதமருக்கு டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.