1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:45 IST)

5,000 குடும்பத்திற்கு உணவு: உறுதி அளித்த ஹர்பஜன் சிங்!!

ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக ஹர்பஜன் சிங் உறுதியளித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 
 
ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, எனது உணவு வழங்கும் பணி தொடரும். வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ஆகியோருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.