1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (11:36 IST)

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் தமிழக மக்கள் மீளவில்லை இந்த நிலையில் கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்ததை அடுத்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை முடிவு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அந்த பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தாரா? என்பது இந்த பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது கடலூரிலும் ஒரு பெண் உயிர் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது