சி.ஆர்.சரஸ்வதியை தக்காளி, செருப்பு, கற்களால் அடித்து விரட்டிய ஆர்.கே நகர்! (வீடியோ இணைப்பு)
சி.ஆர்.சரஸ்வதியை தக்காளி, செருப்பு, கற்களால் அடித்து விரட்டிய ஆர்.கே நகர்! (வீடியோ இணைப்பு)
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் களம் இறங்கியுள்ளதால் இந்த தேர்தல் பரபரப்பாகவே நகர்கிறது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலைக்கு இரு அணியினரும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை தற்காலிகமாக முடக்கி டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு சின்னத்தையும் வழங்கியது.
இதனையடுத்து இரு அணியினரும் களத்தில் தங்கள் தரப்பு சின்னத்தை பிரபலப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் அதிமுக சசிகலா அணியை சேர்ந்தவர்களை பொதுமக்கள் விரட்டியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மீண்டும் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதியை மக்கள் தக்காளி, செருப்பு, கற்கலாலும் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அது போன்ற ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சி.ஆர் சரஸ்வதி செருப்பாலும், கற்கலாலும் அடிப்பது நியாயமா, அராஜகம் பண்றீங்களா என ஆவேசமாக கேட்டார்.