1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:44 IST)

சாலையில் சென்ற நபர்கள் மீது மாடு முட்டியதால் பரபரப்பு.. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மக்கள் அச்சம்..!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் திடீரென சாலையில் சென்ற நபர்கள் மீது மாடு முட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் சென்னையில் பள்ளி சிறுமி ஒருவர் மீது மாடு முட்டியதால் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து மாடு வளர்ப்பவர்கள் தெருவில் நடமாட விடக்கூடாது என்றும் பொதுமக்களை மாடு முட்டினால் மாட்டுக்கு உரியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்று இரவு திடீரென ஒரு மாடு சாலையில் நடந்து சென்றவர்களை  முட்டியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மாடு முட்டியதால் அந்த வழியாக சென்ற இருவருக்கு காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran