புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (12:15 IST)

ரூ.50,000 இழப்பீட்டு தொகையை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?

கொரோனாவுக்கு அரசு வழங்கும் ரூ.50,000 இழப்பீட்டு தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வழக்கு ஒன்றில் ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி 2015 ஆம் ஆண்டு இலவச நிவாரண உதவி என்பதில் திருத்தங்களை மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
ஆனால் இந்த நிவாரண உதவி முன்னதாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் பெற்ற முன்கள பணியாளர்கள் குடும்பங்கள், பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ஒருவரை மட்டும் இழந்து ரூ.3 லட்சம் பெற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
 
இந்த இழப்பீட்டை குடும்பத்தினர் மட்டும் வாரிசுதாரர் பெறுவதை எளிமையாக்கும் வகையில் www.tngov.in என்ற அரசின் இணையத்தில் what's new என்ற பகுதியில் Ex-gratia for COVID 19 என்ற லிங்கை தேர்வு இணைப்பை தேர்வு செய்தால், ஆன்லைன் மூலம் இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தை சம்ர்ப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.