1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:53 IST)

பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

urine
பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் சுப்பையா என்பவர் ஒரு பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்ததாக வழக்கு தொடரப்பட்டது
 
 இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது
 
இருதரப்பிலும் சமரசமாக சென்றதை சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுப்பையா மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் சுப்பையா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது