புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (22:15 IST)

திமுக பேரணிக்கு நீதிமன்றம் தடையா? பரபரப்பு தகவல்

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது
 
இந்த பேரணிக்கு மக்கள்நீதிமய்யம், நடிகர் சங்கம் உட்பட ஒரு சில அமைப்புகள் ஆதரவு தராவிட்டாலும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தந்து உள்ளதால் நாளை பிரமாண்டமாக இந்த பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சற்று முன்னர் வழக்கு தொடுத்த நிலையில் திமுக பேரணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேரணி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை சற்று முன் பேட்டியளித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்
 
நீதிமன்றம் பேரணிக்கு தடை விதிக்காததே எங்களுக்கு பெரிய வெற்றி என்றும் இந்த பேரணியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென நீதிபதியின் வீட்டிற்கு சென்று மனுவை அரசு தரப்பு தாக்கல் செய்துள்ளதாகவும் ஆனால் எங்கள் தரப்பு நியாயத்தை கருதி நீதிமன்றமே எங்கள் பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் முக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே திட்டமிட்டபடி நாளை கத்தி நாளை திமுக பேரணி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது