ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (16:13 IST)

சசிகலா புஷ்பாவிற்கு ஜாமீன் மறுப்பு : விரைவில் கைது?

சசிகலா புஷ்பாவிற்கு ஜாமீன் மறுப்பு : விரைவில் கைது?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


 

 
விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால் அவரின் பதவி பறிக்கப்பட்டது. எம்.பி பதவியிலிருந்து விலகுமாறு, அதிமுக தரப்பில் இருந்து அவருக்கு கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
 
அந்நிலையில், அவர் மீது பல புகார்கள் எழுந்தனர். அவரின் வீட்டில் பணிபுரிந்த இரு பெண்கள், சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது மகன் பிரதீப்ராஜா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் புகார் கூறினார்கள்.
 
இதையடுத்து சசிகலா புஷ்பா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவர் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் 6 வாரத்திற்கு அவரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக உத்தரவிட்டது.
 
அதேபோல் அவர் ஆஜரானார். அன்று அவரின் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், அவரின் ஜாமீன் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மதுரை கிளையில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
எனவே விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.