வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வீடுவீடாக சென்று தடுப்பூசி ஏன் வழங்கவில்லை: மத்திய அரசை விளாசிய நீதிமன்றம்!

இந்தியாவில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருவதை அடுத்து மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நீதிமன்றமும் குற்றம்சாட்டி வருகிறது
 
குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி ஏற்பாடு ஏன் செய்யவில்லை என்று கேள்விக் கணைகளால் நீதிமன்றம் ஏற்பட்டுள்ளது
 
பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பெறுவதற்காக நீண்ட வரிசையில் இருப்பதை காண சகிக்கவில்லை என்றும் ஏன் அரசே தங்களது அதிகாரிகளை வைத்து வீடு வீடாக தடுப்பு ஊசியை கொண்டு செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளது
 
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார்கள் ஆனால் இந்தியாவில் தான் வயதானவர்கள் பெண்கள் முதல் தடுப்பூசிக்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது 
 
மத்திய அரசு உடனடியாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் இது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது