சென்னை மளிகைக் கடைக்காரருக்கு கொரோனா ! கடைக்கு வந்தவர்களை கண்டறிய அரசு முடிவு !
தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் இதுவரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 834 பேரில் 700க்கும் மேற்பட்டவர்கள்டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், சென்னை கேகே நகரில் ஒரு மளிகைக் கடைக்காரர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவரது குடியிருப்பைச் சுற்றி கண்காணிப்பு போட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கடைக்கு வந்துசென்றவர்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
நேற்று பேட்டியளித்துள்ள முதல்வர், தமிழகம் கொரோனாவில் 3 ஆம் நிலைக்குச் செல்லும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.