1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (20:23 IST)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14,051 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.