புதுச்சேரியில் குறையும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,24,675 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,24,675 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,821ஆக உயர்ந்துள்ளது.