செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (15:45 IST)

கொரோனா 3.0: அமைச்சர் சுப்பிரமணியம் தகவல்

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  டெல்டா பிளஸ் கொரொனா வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் எனக் கூறப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியம்., டெல்டா  பிளஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்….இந்தவகைதான் 3 வது அலையாக உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.