Daily Horoscope
✕

வீச காத்திருக்கும் கொரோனா 2 ஆம் அலை? மருத்துவர்கள் எச்சரிக்கை!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 8 மார்ச் 2021 (12:59 IST)
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியதால் கொரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை. 

 
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதன்படி, தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சென்னை தவிர்த்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments