புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (11:35 IST)

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

Aquest Arrest
கோவையில் காவலரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி ஆல்வினை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கடந்த 2023 ஆம் ஆண்டு சத்ய பாண்டி என்பவர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த ஆல்வின் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆல்வினை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவை கொடிசியா மைதானம் பகுதியில், ஆல்வின் மறைந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அவரைப் பிடிக்க உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தலைமை காவலர் சந்திரசேகர் மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் முயன்றனர். 
 
அப்போது ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தான் வைத்திருந்த துப்பாக்கியால்  மூன்று முறை சுட்டதில் 2 குண்டுகள் ஆல்வனின் முட்டிகளில் பாய்ந்தன.  இதைத் தொடர்ந்து ஆல்வினை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

காவலர் ராஜ்குமாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.