நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!
அதானி குழுமத்துடன் தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள நிலையில், "நெருப்பில்லாமல் புகையாது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அதானி குழுமத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், மின்வாரியம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தன்னிடம் நேரடியாக அல்லது மின்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெறாமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது" என்று தெரிவித்தார்.
இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக இருந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்யுமாயின், உண்மை நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையாக ஊழல் நடந்திருக்கிறதா என்பதை நீதியரசர்கள் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
அமெரிக்க நீதிமன்றமே இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதால், 'நெருப்பில்லாமல் புகையாது' என்ற பழமொழி பொருந்துகிறது. தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்," என்றார்.
Edited by Siva