வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (11:59 IST)

இறக்குமதி ஐட்டம்.. பெண் வேட்பாளரை விமர்சனம் செய்த உத்தவ் தாக்கரே கட்சி எம்பி..!

பாஜகவில் இருந்து அண்மையில் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா கட்சிக்கு மாறிய பெண் வேட்பாளரை "இறக்குமதி ஐட்டம்" என உத்தவ் தாக்கரே கட்சியின் எம்பி அரவிந்த் சாவந்த் ஆபாசமாக விமர்சனம் செய்திருப்பது மகாராஷ்டிரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனாவின் வேட்பாளராக ஷைனா என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷைனா பாஜகவில் இருந்து சிவசேனாவுக்கு கட்சிக்கு தேர்தல் சீட்டுக்காக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அந்த தொகுதியில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஷைனாவுக்கு பாஜகவில் சீட் கிடைக்காததால் அவர் சிவசேனாவில் இணைந்ததாகவும், இதுபோன்ற "இறக்குமதி ஐட்டங்களை" கட்சியில் ஏற்றுக்கொள்வதால் அவர் வேட்பாளராக உள்ளதாகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்தார்.

இந்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷைனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் அரவிந்த் சாவந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Edited by Mahendran