1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (08:21 IST)

பகலில் வெயில்.. நள்ளிரவில் கனமழை.. தொடர்ந்து 3வது நாளாக பலத்த மழை..!

rain
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பகலில் வெயில் மற்றும் நள்ளிரவில் கனமழை பெய்து வருவதால், தட்பவெட்ட சூழ்நிலை மாறி மாறி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் நன்றாக அடித்தாலும், இரவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், எனவே இரவில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், விடிய விடிய மாநகராட்சி ஊழியர்கள் மீட்டும் பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவில் பலத்த மழை பெய்தது. 
தொடர்ந்து மூன்றாவது நாளாக பகலில் வெயில் மற்றும் நள்ளிரவில் மழை என்ற சூழல் சென்னையில் நிலவி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக இன்னும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், இந்த மாதம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva