வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (14:31 IST)

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து..! 5 பெண்கள் உள்பட 9 பேர் பலி..! தரைமட்டமான அறைகள்.!

fire workers
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 5 பெண்கள் 4 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சித்தறியதாக சொல்லப்படுகிறது.
 
இதில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
 
ambulance
மேலும் பத்துக்கு மேற்பட்டோர்  படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.