செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (11:28 IST)

தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை.. 30ஆம் தேதி வரை வாபஸ்..!

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலைடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்புமனு  பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் 40 தொகுதிகளில் தனித்தனியாக நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் மீது பரிசினை நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran