சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்.,. மீண்டும் கைது..!

Written By Mahendran
Updated: வியாழன், 4 செப்டம்பர் 2025 (15:14 IST)
தங்கள் பணிகளை நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான உறுதியான பதிலும் அளிக்கப்படாததால், அவர்கள் இன்று மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
 
இந்த கைது நடவடிக்கை, தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மீண்டும் அட்டாக்!. ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்!.. டிரம்ப் எச்சரிக்கை..

தமிழகம் முழுவதும் ரெஸ்டோபாருக்கு அனுமதி!.. மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி!..

120-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் ராஜினாமா.. என்ன நடக்கின்றது இஸ்ரோவில்?

மனிதாபிமானம் எங்கே? பாட்னாவில் லாரி விபத்து – காயமடைந்தவர்களை கண்டுகொள்ளாமல் பாலை திருடிய பொதுமக்கள்

தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிபோகும்: அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments