மீண்டும் தமிழகத்தில் ஒற்றுமை பயணம்: நீலகிரி வருகிறார் ராகுல் காந்தி!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 1,500 கிலோ மீட்டர் கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடை பயணத்தை ஆரம்பித்தார் என்பது தெரிந்ததே.
கன்னியாகுமரியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த இந்த ஒற்றுமை பயணம் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது என்பதும் தற்போது அவர் கேரளாவில் நடை பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆரம்பித்த நடைப் பயணம் இன்று மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளது. கேரளாவில் உள்ள நிலம்பூர் வழியாக நீலகிரி கூடலூர் ஆகிய தமிழக பகுதிகளுக்கு ராகுல்காந்தி வருகிறார் என்றும் அங்கு உள்ள ஆதிவாசி இன மக்களை சந்தித்து உரையாட உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது