Daily Horoscope
✕

பெண்களை அப்படி பேசியது தவறு.. மன்னித்துவிடுங்கள்! – காங்கிரஸ் எம்.எல்.ஏ!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:15 IST)
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளவர் ரமேஷ் குமார். தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் பேசிய ரமேஷ்குமார், பெண்களால் பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என பேசியது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இதற்காக சட்டமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு பேசிய ரமேஷ்குமார் “எனது கருத்து பெண்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எனினும் அவர் அவ்வாறு பேசியதற்கு நடவடிக்கை தேவை என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு.. தவெக பலம் 109...

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. ஒரு கிலோ ரூ.35 மட்டுமே..

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்.. ஹூதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

உச்சநீதிமன்ற நீதிபதியை சந்திக்க ஊர்வலமாக செல்ல திட்டம்.. இந்தியா கூட்டணி தலைவர்களின் அடுத்த மூவ்..

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

அடுத்த கட்டுரையில்