புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (09:50 IST)

காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பூவின் பதவி பறிப்பு

கடந்த சில மாதங்களாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக வதந்திகள் வெளி வந்து கொண்டே இருந்தன இந்த வதந்திகளை அவ்வப்போது தனது டுவிட்டர் தளத்திலும், பேட்டியிலும் குஷ்பு மறுத்து வந்தார் என்பதும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது மறுப்பை அழுத்தமாக பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள குஷ்பு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக குஷ்பு மீது நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்து குஷ்பு அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளதாக தெரியவருகிறது