1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (12:27 IST)

தமிழக காங்கிரஸ் கட்சியின் கொரோனா நிதி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தாராளமாக நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழிலதிபர்கள் திரையுலக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி அளித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்தநிலையில் அரசியல் கட்சிகளும் தாராளமாக தமிழக அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி கொரோனா நிதி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
இதன்படி தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 மக்களவை எம்பி களம் 18 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது