Daily Horoscope

ஈபிஎஸ்க்கு போட்டியாக மாநாடு! ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை!

Written By Prasanth.K
Updated: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (09:26 IST)
இன்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநாடு நடத்தும் நிலையில் அதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வமும் மாநாடு நடத்த உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை காட்டும் விதமாக பிரம்மாண்டமான அதிமுக கட்சி மாநாட்டை இன்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடத்துகிறார்.

அதனால் மேற்கு மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை காட்டும் விதமாக ஒரு மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் ஓபிஎஸ் விரைவில் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

லண்டனில் முதல்வர் விஜயின் நிகழ்ச்சி ரத்து!.. என்ன காரணம்?..

இங்கே ஒரே பிரச்சனை!.. விஜய் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார்!.. ஸ்டாலின் கோபம்!..

பல கோடி லஞ்சம்!.. அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு!.. காவல்துறை அதிரடி...

அரசு மருத்துவமனையில் ரூ.70,000 சம்பளம்.. ஆனால் பணிக்கு வராமல் காலேஜ் சென்ற டாக்டர்.. அதிரடி நடவடிக்கை..

ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து ஐஆர்சிடிசி சாதனை.. கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments