வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (12:41 IST)

ஆண்களுக்கு ஃப்ரி டிக்கெட் கொடுத்து பணம் பறித்த நடத்துனர்

வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்ற சம்பவத்தால் பரபரப்பு. 

 
தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள் ஆகியோர் இவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். 
 
இலவசமாக பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகளிடம் வரும் உதவியாளர் ஆகியோர்களுக்கு பேருந்தில் டிக்கெட் வழங்கி வருகின்றனர். கட்டணமில்லா பயணச்சீட்டு என்று அந்த தனி டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். 
 
இந்நிலையில், சேலம் நகரப் பேருந்தில் ஏறிய வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்றுள்ளார். மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி செய்த நடத்துனர் நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.