திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (08:40 IST)

இலவச பயணம் என்றாலும் டிக்கெட் வாங்கனும்...

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும். 

 
மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்தை போல மாற்றுதிறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகையை தமிழக அரசு அறிவித்தது. 
 
அதன்படி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.