திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (16:00 IST)

ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் கீழே விழுந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்ட்

நேற்று அரசு பேருந்தில் இருந்து நடத்துநர் இருக்கையுடன் கீழே விழுந்த விவகாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் உள்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் அமர்ந்திருந்த நடத்துநர் திடீரென பேருந்து வளைந்த போது இருக்கையுடன் கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்த புகைப்படம் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அரசு பேருந்துகளின் தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது
 
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்த போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளை மேலாளர் ராஜசேகர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited by Siva