Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்!

Written By siva
Updated: புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்!
தமிழக பள்ளிகளில் தற்போது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இருக்கும் நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
கம்ப்யூட்டர் அறிவை ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில் ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடங்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன 
 
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் இந்த ஆண்டே இந்த பாடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொண்டால் கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
 
 

எல்லாம் காட்டு

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments