ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (21:31 IST)

தீயணைப்பு மீட்புபணித்துறையின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கரூரில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணித்துறையின் மத்திய மண்டலத்திற்கு உரிய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்கம் – 9 மாவட்டங்களை சார்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணித்துறை, இயக்குநர் அவர்களின் ஆணையின் படி, திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலத்திற்குரிய விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் 9 மாவட்டங்களை உள்ளடக்கிய 8 அணிகளாக விளையாட்டு போட்டிகளில் பிரிக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், கரூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் என்று 9 மாவட்டங்களை சார்ந்த வீரர்கள் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாண்டு வருகின்றனர்.

இப்போட்டிகளானது., மத்திய மண்டல துணை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியில், தொழில்நுட்ப போட்டிகள் (அதாவது துறை சார்ந்த விபத்தில் எப்படி காப்பாற்றுவது, கயிறுகள் கொண்டு காப்பாற்றுவது, தண்ணீர் பீய்ச்சும் குழாய்களை முறையாக எப்படி மடக்கி வைப்பது,), நீச்சல் போட்டி, தடகள போட்டி, கைப்பந்து, கூடைப்பந்து, இறகு பந்து ஆகிய போட்டிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.