திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (23:09 IST)

15 அடி உயரத்தில் தொங்கிய வளையத்தில் செய்து கல்லூரி மாணவி சாதனை.

sports
விருதுநகரில் கர்ப்ப பிண்ட ஆசனத்தை 15 அடி உயரத்தில் தொங்கிய வளையத்தில் செய்து கல்லூரி மாணவி சாதனை.
 
 
விருதுநகரில் கர்ப்ப பிண்ட ஆசனத்தில் 15 அடி உயரத்தில் உள்ள வளையத்தில் எட்டு நிமிடம் செய்து கல்லூரி மாணவி அனுப்பிரியா சாதனை புரிந்துள்ளார்.
 
 
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் ஜானகி. இவர்களது மகள் அனுப்பிரியா நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர் மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
 
 
 இந்நிலையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அனுப்பிரியா கர்ப்ப பிண்ட ஆசனத்தை பதினைந்து அடி உயரத்தில் தொங்கிய வளையத்தின் மீது அமர்ந்த படி எட்டு நிமிடம் ஆசனத்தை செய்து நோபில் வேர்ல்டு ரெக்கார்ட் சாதனை புரிந்தார்.
 
 
 இதற்கான சான்றிதழை நடுவர்கள் திலீபன், பசுபதி ஆகியோர் வழங்கினர். முன்னதாக கல்லூரி மாணவி யோகாசன நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். சாதனை புரிந்த மாணவியை யோகா ஆசிரியர் ஜெயக்குமார் உட்பட பலரும் பாராட்டினர்.