கோவை சிலிண்டர் வெடிப்பு: சதியாகவும் இருக்க வாய்ப்பு - ஹெச்.ராஜா டிவீட்
கோவை நகரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று காலை காரில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை தேவை என ஹெச்.ராஜா டுவீட் பதிவிட்டுள்ளார்.
கோவை நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று காலையில் அங்கிருந்த ஒரு மாருதி ஆல்ட்டோ கார் வெடித்து சிதறியது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், வெடித்துச் சிதறிய காருக்குள் பால்ரஸ் குண்டுகள் மற்றும் ஆணிகள் அங்கு கிடந்ததை தடய அறிவியல் துறையில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ள நேரம் இடம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது சதியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர விசாரணை தேவை என்று ஹெச்.ராஜா டுவீட் பதிவிட்டுள்ளார்.,
Edited by Sinoj