திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2023 (18:07 IST)

கூரை, மண் வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறவும்: கலெக்டர் எச்சரிக்கை..

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோவை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ’கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் மக்கள்  மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
 
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று குளிக்கவோ, செல்பி எடுக்கவோ, அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva