இந்தி படிக்க விருப்பமா? கோவை பள்ளி விண்ணப்பத்தால் சர்ச்சை!
தமிழகத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படாது என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதை தொடர்ந்து தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும் இருமொழி கொள்கையே தொடரும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் “மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகபடியாக கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்பது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத சூழலில் அவற்றில் உள்ள அம்சங்கள் பள்ளி விண்ணப்ப படிவத்தில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.