புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:36 IST)

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி: நடிகர் கமல் பேட்டி

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், ’மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது நிருபர்கள் நீங்கள் யாருடன் கூட்டண் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது:
 
'நான் மக்களிடம் தான் செல்லுகிறேன்.பல அரசியல் தலைவர்களிடம் எனக்கென்று தனிமரியாதை உள்ளது.அப்படி என்னை மதிக்கவில்லையென்றால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது.போரட்டம் என்பது கனமான வார்த்தை அதனால் சட்டரீதியாக போராடுவோம் .
 
மேலும் ஊழல் செய்தவர்களுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை.ஊழல் யார் செய்தார்கள் என்பதுதான் முக்கியம் ஒருவர் செய்த ஊழலுக்கு மற்றொருவரை குற்றம் சொல்ல முடியாது.
 
மக்கள் நீதி மையத்தில் உறுப்பினர் சேர்க்கை நல்லமுறையில் நடந்து வருகிறது.பத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது கோவை மாணவி கைது செய்யப்பட்டது கண்டிக்கப்படத்தக்கதாகும். நான் யாரை நம்பியும் இல்லை. ' இவ்வாறு அவர் கூறினார்.