1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (10:05 IST)

பொங்கல் தினத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது சித்திரை மாதம் கொண்டாடிவரும் தமிழ் புத்தாண்டை தை மாதமாக மாற்றி கொண்டாடி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழர்கள் அனைவரும் பொங்கல் தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என முதல்வர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும், தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் நன்மை விளையட்டும், தமிழ் பண்பாட்டின் அடையாளமான திருநாள் உழவர் திருநாள். பூமிப்பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல், இன்பத் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்கள்’ என முதல்வர் தெரிவித்துள்ளார்
 
திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினமும் மாறி மாறி வருவது பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.