1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:59 IST)

ஜன.17 திங்கள் கிழமை அரசு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
பொங்கல் விடுமுறையாக ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் தைப்பூச விடுமுறையாக ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருப்பதால் ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு ஜனவரி 17 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது 
 
மேலும் ஜனவரி 16 அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் பேருந்துகளில் செல்ல முடியாது என்பதால் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது ஜனவரி 17ஆம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு நாளில் வேலைநாள் அமர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது