1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (12:45 IST)

ஓபிஎஸ் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திடீரென முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் சமீபத்தில் மறைவடைந்த நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினார் என்பதும் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு ஓபிஎஸ் இடம் ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றார். 
 
இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் ஆறுதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை இந்நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்திருப்பது அரசியல் உலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran