1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:14 IST)

அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டு: I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..!

mk stalin
அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமையும் என்று I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார். 
 
மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார். ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கூறினார். 
 
எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலர தேவையான கொள்கையால் நம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை I.N.D.I.A கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்றும் I.N.D.I.A கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva