வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (21:23 IST)

சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நம்பர்-ஒன் முதல்வர் என்ற விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது:
 
 கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு; அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.