ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (12:26 IST)

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத்தொகை: முதல்வர் வழங்கினார்

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்
 
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிலுவையில் இருந்த ரூபாய் 497.32 கோடியை 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பயன்களின் நிலுவைத் தொகையான ரூபாய் 497.32 கோடி ரூபாயை 2457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையான காசோலைகளை வழங்கினார்கள் 
 
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.