1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:47 IST)

திராவிட மாடல் என்றால் என்ன? மோடி முன் விளக்கிய ஸ்டாலின்!

Stalin
கடந்த சில நாட்களாக திமுகவினர் உள்பட ஒரு சில கட்சியினர் திராவிட மாடல் என்று கூறிவரும் நிலையில் திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி முன்னிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
 
இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்ட தொடக்க விழாவை தொடங்கி வைத்தார்/ இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ’தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் சமூகநீதி பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் அனைத்து தரப்பினருக்கும் மன வளர்ச்சியை உள்ளடக்கியதே திராவிட மாடல் வளர்ச்சி என்றும் கூறினார் 
 
பிரதமர் மோடி முன்னிலையிலொ தமிழக முதல்வர் திராவிட மாடல் குறித்து விளக்கமளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது